படுகொலை சதித்திட்டம் – இரண்டு வாரங்களில் சிஐடியின் விசாரணை அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வாரங்களில் சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இந்த சதித் திட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சில நாட்களுக்கு முன்னதாக தம்மிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!