ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் பதவி?

இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் சிறிலங்கா அமைச்சரவையில் இடமளிக்கப்படவுள்ளது. அமைச்சராகப் பதவியேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நேற்று நடந்த கூட்டத்தின் பின்னரே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், ஆனாலும், மே நாள் பேரணியில் பங்கேற்க வேண்டியிருந்ததால் தாம் அங்கு செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் இணைந்து கொள்வது குறித்து பேசுவதற்காக நேற்று பிற்பகல் கொழும்பு செல்லவிருப்பதாகவும், ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இதற்கிடையே, பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!