சர்வதேசத்திடம் நிதியை பெற்று வடக்கிற்கு போதைப்பொருளை அனுப்பியது மகிந்த அரசு! – விஜயகலா

மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அபிவிருத்திக்கு என சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று வடக்கு கிழக்கிற்கு போதைப்பொருட்களையே அனுப்பியது என கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடமராட்சி மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இன்று நான் பல பாடசாலைகளுக்கு சென்றுள்ளேன். வட கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்திலும் பல பாடசாலைகள் உள்ளன. முப்பது வருட யுத்தத்தில் பாடசாலைகள் பாதிக்கப்படவில்லை. கல்வி பாதிக்கப்படவில்லை ஆனால் இன்று மாணவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகிவிட்டார்கள்.

பாடசாலைகளில் சரியான கல்வி இன்மை உடற்பயிற்சிக்கு சரியான மைதானம் இல்லாமை போன்றவற்றால் பல இளைஞர்கள் வீதிகளிலே தமது பொழுதுகளை களிக்கின்றார்கள் இதனால் பல மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.

கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதாக சர்வதேசத்திற்க்கு கூறிவிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் போதை வஸ்தையே அனுப்பியுள்ளார்கள் இந்த நல்லாட்சி அரசு வந்த பின் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பல பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

போதை வஸ்திலிருந்து இளைஞர்களை பாதுகாத்துள்ளோம். அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ஊடாக. அரச படைகள் வசமிருந்த பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசு யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதாக கூறி ஏனைய ஏழு மாகாணங்களையும் துரித அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்

இப்படி ஒரு பாதிக்கப்பட்ட மாகாணமாகவோ மாவட்டமாகவோ காணப்படவில்லை உண்மையிலேயே எமது வடக்கு கிழக்கு பிரதேசம் இயற்கையாலும் யுத்த அனர்த்தாலும் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் படையினர் வசமிருந்த 5000 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது.

இனது கல்வி இராஜாங்க அமைச்சு ஊடாக தொகுதி ரீதியாக மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டும் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வியையும் ஒரே பிரதேசத்தில் கற்கக். கூடிய. வகையிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு தேசிய பாடசாலை அமைக்கும் பணிகள் தமது அமைச்சினூடாக மேற் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் ஒட்டுசுட்டான் பண்டார வன்னியன் பாடசாலையில் ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் ஒரு கணனி கூட இல்லை என்றும் பல ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் வளங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவு தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!