வடக்கில் 700 பெண்களின் நுண் நிதிக் கடன்கள் தள்ளுபடி! – ஐ.நாவுக்கு கணக்குக் காட்ட அரசு நடவடிக்கை.

நுண்­நி­திக் கட­னைப் பெற்று அதனை மீளச்செலுத்த முடி­யாத நிலையில் உள்ள 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் கடன்­கள் முழு­மை­யாகத் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்­கான சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு வியா­ழக்கிழமை காலை யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில், நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்­வில் நுண் நிதிக் கடன் தொடர்­பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் முன்­வைத்­துள்ள அறிக்கை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அர­சாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

2017ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் வடக்­கில் அதி­க­ள­வில் நுண்­நி­திக் கடன்­கள் பெறப்­பட்­டன. பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளால் அவை அதி­க­ள­வில் பெற்­றுக் கொள்­ளப்­பட்­டன. நுண்­நி­திக் கடன்­களை மீளச் செலுத்த முடி­யா­மல் பலர் தவ­றான முடி­வு­களை எடுத்து உயி­ரி­ழந்­த­னர். நுண்­நி­திக் கடன்­களை வசூ­லிக்­கச் செல்­வோர் வரம்பு மீறிச் செயற்­பட்­ட­து­டன், பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளி­டம் பாலி­யல் லஞ்­ச­மும் கோரப்­பட்­டி­ருந்­தது.

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் நுண்­நி­திக் கடன்­களை தள்­ளு­படி செய்­யும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அமை­வாக வடக்­கைச் சேர்ந்த 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் நுண்­நி­திக் கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. நுண்­நி­திக் கட­னைத் தள்­ளு­படி செய்­த­மைக்­கான சான்­றி­தழ், வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­றும் நிகழ்­வில் வைத்து பய­னா­ளி­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!