ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சிறிலங்கா வருகிறார்

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் கென்ராரோ சோனோரா அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருக்கும் அவர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுடன், பேச்சு நடத்துவார்.

முக்கியமாக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான வெளிப்படையான ஒத்துழைப்பு தொடர்பாக அவர் கலந்துரையாடுவார்.

கொழும்பு துறைமுகத்தில் சிறிலங்கா கடலோரக் காவல் படைக்கு ஜப்பானிய கடலோரக் காவல்படை அளித்து வந்த எண்ணெய் மீட்பு பயிற்சிகளின் நிறைவு நிகழ்விலும் இவர் கலந்து கொள்வார்.

அத்துடன் முதல் முறையாக ஜப்பான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுக்களிலும் கென்ராரோ சோனோரா பங்கேற்கவுள்ளார்.

இவரது பயணம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!