சம்பந்தனால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் – ஜி.எல். பீறிஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்த பொழுது அரசியலமைப்பு பேரவையின் ஊடாக அவரால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் இரத்தது செய்யப்பட வேண்டும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிர் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரா. சம்பந்தன் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக இருந்தபொழுது அவரால் பரிந்துரைக்கப்பட்ட மிகுதியாக காணப்படுகின்ற உறுப்பினர்கள், முக்கிய ஆணைக்குழுக்களுக்கு அவரால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் தற்போது செல்லுபடியற்றதாக காணப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான பரிந்துரை நியமனங்கள் அனைத்தையும் உடனடியான இரத்து செய்ய வேண்டும். அத்துடன் புதிய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த நியமனங்களை மீள் பரிசீலனை செய்யும் வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!