யுத்த வரலாற்றைப்பேசி பிரச்சினைகளை ஏற்படுத்துவது சிறந்ததல்ல : சுமதிபால

யுத்தகால வரலாற்றை பேசி மீண்டும் மீண்டும் நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது சிறந்ததல்ல. யாரால் தவறிழைக்கப்பட்டது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல் எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற இரு தரப்பு தவறுகளையும் மறந்து மன்னித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கிளிநொச்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆகியோர் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் இது குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!