கொக்கெய்ன் பாவனை – எல்லா எம்.பிக்களிடமும் டி.என்.ஏ பரிசோதனை நடத்த மஹிந்த எதிர்ப்பு!

கொக்கெய்ன் பாவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கொக்கெய்ன் விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்ச்சையின் ​போது கருத்து வெளியிட்ட அவர் , சகல எம்.பிக்களையும் டி.என்.ஏ பரிசோதனை நடத்தத் தேவையில்லை என்றார்.

இதில் உரையாற்றிய செஹான் ​சேமசிங்க,எம்.பிக்களை டி.என்.ஏ விசாரணைக்குட்படுத்தி கொக்கேயின் பயன்படுத்துவோரை அம்பலப்படுத்த வேண்டும். எம்.பிக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க இந்த விசாரணை அவசியம். இந்தப் பிரச்சினையை துரிதமாக தீர்க்க வேண்டும். இது தொடர்பில் ஐ.தே.க விசாரணை நடத்த குழு நியமித்துள்ளது. ஆனால் முன்வரிசை அமைச்சர்கள் நால்வர் கூட கொக்கேயின் பயன்படுத்துவதாக ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளதால் முன்வரிசையில் இருப்பவர்களை விசாரணைக் குழுவுக்கு நியமிக்கக் கூடாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!