அமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி

அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாலிபர் ஒருவர், கிராண்ட் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்க நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ரெயில் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலின் கதவுகள் மூடப்பட்டிருந்தபோதும், அந்த வாலிபரின் சட்டை ரெயிலின் கதவில் மாட்டிக் கொண்டது. இதனால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு, சுரங்கப்பதை தண்டவாளத்தில் விழுந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த வாலிபரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த வாலிபர் யார் என சரிவர தெரியாத நிலையில், இதனை விசாரித்த அதிகாரிகள் அவரது சடலத்தில் இருந்த மெக்சிகன் தூதரகம் அளித்த அடையாள அட்டையை கண்டறிந்தனர். இதன்மூலம் அந்த வாலிபர், குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த விசன்டே அலடோர் என தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!