அரசியல் அமைப்பு பேரவையை கால்ப்பந்தாக்கிவிட வேண்டாம் – சபையில் சம்பந்தன்

அரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் அமைப்பு பேரவை அரசியல் கால்ப்பந்தாக மாறிவிடக்கூடாது, அரசியல் அமைப்பு பேரவையை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு பேரவை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சி இன்று நீதித்துறை மீதான விமர்சனத்தை முன்வைத்து இந்த விவாதத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்த நாட்டின் கடந்த கால சட்ட நகர்வுகள் எவ்வாறு கையாளப்பட்டது என்பது எமக்கு தெரியும். அப்போதைய பிரதம நீதியரசர் உங்களின் விருப்பத்திற்கு தீர்ப்பு வழங்கவில்லை என்ற காரணத்தினால் ஒரே நாளில் அவரை நீக்கினீர்கள்.

அதேபோல் இன்னொரு நீதியரசர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அலரிமாளிகையில் இருந்தார் , அவருக்கு அங்கு என்ன வேலை இருந்தது. இவ்வாறான கேக்விகளே எமக்கு நீதித்துறை மீது எழுந்தது. ஆகவே சட்ட நன்மதிப்பு என்பது மிகவும் முக்கியமானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!