10 பிரதி அமைச்சர்கள், 8 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று முன்தினம் செய்யப்பட்ட மாற்றங்களை அடுத்து, நேற்று 10 பிரதி அமைச்சர்கள் மற்றும் 8 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த நிகழ்வில் இவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்றனர்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களாக இருந்த இருவரின் அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஐந்து இராஜாங்க அமைச்சர்களுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஒருவர் புதிதாக இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நான்கு பிரதி அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மூன்று பிரதி அமைச்சர்களுக்கு மேலதிக பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு அமைச்சுக்களை வைத்திருந்த பிரதி அமைச்சர் ஒருவர் அவற்றின் ஒன்றை இழந்து, மற்றொரு அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளார்.ஒரு பிரதி அமைச்சர் தனது பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஒருவர் மாத்திரமே புதிதாக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!