வடக்கில் நாளை மறுநாள் முழு அடைப்­புப் போராட்­டம்! – அனைத்து தரப்புகளும் ஆதரவு.

?????????????
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில், வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் திங்­கட்­கி­ழமை முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தமது தொடர் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்வை இலக்கு வைத்­தும், நாளை மறு­தி­னம் திங்­கட்கிழமை வடக்கு மாகாணம் தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ள­னர். அன்­றைய தினம் கிளி­நொச்சி நக­ரில் காலை கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தப் போராட்­டத்­துக்கு அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள், ஒன்­றி­யங்­கள், சிவில் சமூக அமைப்­புக்­கள் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­கள் ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்­கள்.

இந்­தப் போராட்­டத்­துக்கு பல தரப்­புக்­க­ளும் முழு­மை­யாக ஆத­ரவை வழங்­கி­யுள்­ள­தால் அன்­றைய தினம் வடக்கு மாகா­ணத்­தின் இயல்பு நிலை முழு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள், வர்த்­தக சேவை­கள் உள்­ளிட்ட அனைத்தும் முடங்­கும்.

இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் நேற்­றி­ரவு விடுத்த ஊடக அறிக்­கை­யில், வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி வேண்­டி­யும் திங்­க­ளன்று ஆரம்­ப­மா­கும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை அமர்வை முன்­னி­றுத்­தி­யும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளால் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­டும் கவ­ன­வீர்ப்பு போராட்­டத்­துக்­கும், முழு­அ­டைப்­புப் போராட்­டத்­துக்­கும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக சமூ­கம் முழு­மை­யான ஆத­ரவு நல்­கு­வ­தோடு அனை­வ­ரை­யும் ஆத­ரவு வழங்­கு­மாறு வேண்­டி­யும் நிற்­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளுள் ஒன்­றா­கவே வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ர­மும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் உள்­ளக கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்ள முடி­யாத நிலை­யில் தொடர்ந்­தும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை­யால் மேற்­படி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வ­தை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது.

பொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க இலங்கை அரசு தொடர்ந்­தும் தவ­று­வ­த­னால் அந்­தக் குற்­றங்­கள் தொடர்­பில் பன்­னாட்டு நீதி­மன்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­யின் கீழ் அதனை நிறை­வேற்ற வேண்­டிய அவ­சி­யம் எழு­வதை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகளுக்கான நியா­ய­மான தீர்வை பன்­னாட்டு விசா­ர­ணைப் பொறி­முறை ஒன்­றி­னூ­டா­கவே சாத்­தி­ய­மாக்க முடி­யும். ஐ.நா. பாது­காப்­புச் சபை ஊடாக இலங்கை விவ­கா­ரம் கையா­ளப்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்­றுள்­ளது.

இதே­போன்று பல தரப்­புக்­க­ளும் அன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யுள்­ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!