மஹிந்த – மைத்திரி கூட்டணி பேச்சு – பசில் புறக்கணிப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்தவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி, யாப்பு தயாரிப்பு உட்பட்ட விடயங்கள் குறித்த இந்த குழு தீர்மானித்து அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில், பசில் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.

இது, தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸநாயக்க, கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்த இழுத்தடிப்பையும் மேற்கொள்ளவில்லை. எனினும், பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லையென என்னால் கூற முடியாது.பேச்சுவார்த்தையில், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக அதிருப்தியடைபவர்களும் இருக்கின்றனர். என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!