வடக்குக்கான பொருளாதாரக் கட்டமைப்பு நூலை மீண்டும் கொழும்பில் வெளியிட்ட மங்கள சமரவீர!

வடக்­குக்­கான பொரு­ளா­தா­ரக் கட்­ட­மைப்பு ஆய்வு நூல் கொழும்­பில் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர், வெளிநாட்டுத் தூத­ரக அதி­கா­ரி­கள் உள்­ளிட்­டோர் இதில் கலந்து கொண்­ட­னர்.

வரவு -செல­வுத் திட்­டத்­துக்­கான முன்­மொ­ழிவு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் என்று கரு­தியே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இதில் பங்­கேற்­றி­ருந்­த­னர். எனினும் அது தொடர்­பில் ஆரா­யப்­ப­ட­வில்லை. அடுத்த பத்து ஆண்­டுக்­க­ளுக்­கான வடக்கு மாகா­ணத்­தின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்­பான ஆய்வு நூலே வெளி­யி­டப்­பட்­டது. இது ஏற்கனவே, யாழ்ப்­பா­ணத்­தில் வெளி­யி­டப்­பட்டதாகும்.

இந்தக் கூட்டத்தில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், 10 ஆண்­டு­கால திட்­டங்­கள் அவ­சி­யம்­தான். ஆனால், உட­ன­டி­யாக குறு­கிய கால அபி­வி­ருத்தி தொடர்­பில் ஆரா­ய­ வேண்­டும். அது முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தீர்க்­கப்­பட வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

இந்­தக் கூட்­டத்­தில் எந்­த­வொரு முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!