உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் 20ஆம் நாள் ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த விவாதம் நடக்கவுள்ளதுடன், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானமும் பிரித்தானியாவினால் முன்வைக்கப்படவுள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்துக்கு உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!