இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – சிறிலங்கா கோரிக்கை

தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பேறுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையை அடுத்து. சிறிலங்கா வெளிவிவாகர அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் இந்தியாவின் துணை ஆயுதப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், எல்லா வடிவத்திலுமான தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில், பதற்றத்தைத் தணித்து, இருதரப்பு பிரச்சினைகளுக்கு கலந்துரையாடமல் மூலம் தீர்வு காண்பதற்கும், அமைதி மற்றும் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!