போரை நிறுத்தாவிடின் போர்க்குற்றச்சாட்டு சுமத்துவோம் – சிறிலங்காவை எச்சரித்த பிளேக்

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு போரை நிறுத்தாவிட்டால், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த றோகித போகொல்லாகமவிடம் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார் என்று தகவல் வெளியிட்டுள்ளார் கலாநிதி மொகான் சமரநாயக்க.

அரசியல் ஆய்வாளரும், மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது ஊடகப் பேச்சாளராக பதவி வகித்தவருமான மொகான் சமரநாயக்க, கொழும்பில் நேற்று முன்தினம் ‘எலிய’ அமைப்பினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன்போது, அவர், “சிறிலங்காவில் கால் வைப்பதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அவர்களின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களாகும்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, போரை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் பேச்சைக் கேட்காவிட்டால், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, கொழும்பில் இருந்த அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த றோகித பொகொல்லாகமவை எச்சரித்திருந்தார்” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!