ரஞ்சன் ராமநாயக்க சொத்து விபரங்களை வெளியிட்டார்

தமது சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிட்ட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து நேற்றுரஞ்சன் ராமநாயக்கவும் தனது சொத்து விபரங்களை வெளியிட்டு ஆறாவது பாராளுமன்ற உறுப்பினராக இணைந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்காரரூபவ் தாரக பாலசூரிய,விதுர விக்கிரமநாயக்க,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் தமது சொத்து விபரங்களை கடந்த வியாழக்கிழமை பகிரங்கமாக வெளியிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் சொத்து விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தது.

அதுமாத்திரமன்றி கடந்த கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சொத்து விபரங்களைப் பகிரங்கப்படுத்துமாறும்வ் அது தொடர்பில் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் வகையிலான விளம்பரமொன்றை ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்திருந்தது.

அந்தவகையில் தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தமது சொத்து விபரங்களை கடந்த வியாழக்கிழமை நிப்பொன் ஹோட்டலில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது பகிரங்கமாக வெளியிட்டதுடன் அதனை மக்களும் பார்வையிட முடியும் என அறிவித்தனர்.

அவர்களைத் தொடர்ந்தே தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் தனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!