சந்திரிகாவின் பரிந்துரைக்கு மதிப்பு அளிக்காத மைத்திரி

தன்­னைக் கொலை செய்ய முயன்ற குற்­றத்­துக்­காக நீண்­ட­கா­லம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு வெசாக்கை முன்­னிட்டு மன்­னிப்பு வழங்­கு­மாறு, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க விடுத்த வேண்­டு­கோள், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அறிய முடி­கின்­றது.

அரச தலை­வ­ராக சந்­தி­ரிகா அம்­மை­யார் பதவி வகித்­த ­போது, அவர் மீது தாக்­கு­தல் நடத்தத் திட்­ட­ மிட்ட, உத­விய குற்­றத்­துக்­காக தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் டுள்­ளது. சந்­தேக நபர்­க­ளாக மிக நீண்ட
கால­மாக சிறை­வா­சம் அனு­ப­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ளிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில், வெசாக்கை முன்­னிட்டு அவர்­களை மன்­னிப்­பில் விடு­விக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா அம்­மை­யார் கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இது­வ­ரை­யில் அவ­ரது கோரிக்­கைக்கு அமை­வாக அர­சி­யல் கைதி­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. அரச தலை­வர், முன்­னாள் அரச தலை­வ­ரின் கோரிக்­கையை ஏற்­றுக் கொள்­ளா­மை­யி­னா­லேயே அவர்­களை விடு­விக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­யான ஆனந்­த­சு­தா­க­ரது பிள்­ளை­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நேரில் சந்­தித்­தி­ருந்­தார். ஆனந்­த­சு­தா­கரை மன்­னிப்­பில் சித்­தி­ரைப் புத்­தாண்­டுக்கு விடு­விப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால், இன்று வரை­யில் ஆனந்த சுதா­கர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!