கீரிமலையில் பொதுமக்களின் 62 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் அரசின் திட்டத்துக்கு மாவை எதிர்ப்பு!

?????????????????????????????????????????????????????????
யாழ்ப்­பா­ணம், கீரி­ம­லைப் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­னர் வச­முள்ள தமிழ் மக்­க­ளின் நிலங்­க­ளில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்­ளிட்ட 64 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் 62 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை சுற்­றுலா அதி­கார சபைக்கு வழங்­கு­வ­தற்கு எடுக்­கப்­பட்­டு ­வ­ரும் நட­வ­டிக்­கை­களை ஏற்க முடி­யாது என்று வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா தெரிவித்துள்ளார்.

கீரி­ம­லைப் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்ள ஜனாதிபதி மாளி­கை­யு­டன் கூடிய 64 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று நீண்­ட­கா­ல­மாக கோரப்­பட்­டு ­வ­ரும் நிலை­யில் தற்­போது அந்த இடத்­தில் 2 ஏக்­கர் நிலப்­ப­ரப்­புக்­குள் கடற்­ப­டைத் தளத்தை நகர்த்தி எஞ்­சிய 62 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பை­யும் சுற்­றுலா அதி­கார சபைக்கு வழங்­கு­வ­தற்கு ஜனாதிபதியுடனான சந்­திப்­பில் இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யி­லேயே இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா, ஜனாதிபதி மாளிகை அமைந்­துள்ள 20 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை மட்­டுமே சுற்­றுலா அதி­கார சபை­யி­டம் வழங்­கு­வது தொடர்­பில் ஆராய முடி­யும். அதற்கு மாறாக மக்­க­ளின் வாழ்­வி­டம், வர­லாற்று ஆல­யப் பகுதி, பொது மயா­னம், கிருஸ்­ணன் ஆல­யம், சடை­யம்மா மடம், குழந்­தை­வேல் சுவாமி சமாதி, காசி விஸ்­வ­நா­தர் ஆல­யம் உள்­ளிட்­ட­வற்றை மக்­க­ளி­டமே வழங்க வேண்­டும். இதன்­படி 42 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!