பார்வைத்திறன் இல்லாதவர்கள் அடையாளம் காணும் வகையில் நாணயங்கள்!

பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில் அடையாளம் காணும் வகையிலான புதிய நாணயங்களையும், புதிய 20 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். டெல்லியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். பின் ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் ஆகிய நாணயங்களை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியும் கூட்டாக வெளியிட்டனர்.

புதிய நாணயங்களில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் எத்தனை ரூபாய் என்பதை எளிதில் கண்டறியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இது அவர்கள் அன்றாட வாழ்வில் சிரமமின்றி வரவு, செலவு செய்ய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!