ஜெனிவாவில் முன்வைக்கும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க கோருகிறார் வடக்கு ஆளுநர்!

ஜெனிவாவில் நடைபெறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின், அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெமனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் -கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்க முடியும்.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!