ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்கு சவால்! – ரணில்

இலங்கை தொடர்­பாக, ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ளர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை நாட்­டுக்­குச் சவால் மிக்­கது என்றும், இது தொடர்­பில் அரசாங்க உயர்­பீ­டம் ஒன்­று­கூடி தமது நிலைப்­பாட்டை விரை­வில் அறி­விக்­கும் எனவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

‘எமது உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு ஜெனி­வா­வி­லும் வைத்து அறி­விக்­கப்­ப­டும். இலங்கை தொடர்­பில் இம்­மு­றை­யும் ஐ.நாவில் கொண்­டு ­வ­ரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­துக்கு நாம் இணை அனு­ச­ரணை வழங்க வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கின்­றோம்’ என்­றும் அவர் குறிப்பிட்டார்.

வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றத் தவ­றிய இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை, போர்க்­குற்­றங்­க­ளுக்­குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக உல­க­ளா­விய ரீதி­யில் சாத்­தி­ய­மான விசா­ரணை, ஐ.நா. ஆணை­யா­ளர் அலு­வ­ல­கம் இலங்­கை­யில் அமைக்­கப்­ப­டு­தல், இலங்­கை­யைத் தொடர்ந்­தும் மனித உரி­மை­கள் ஆணைக்­குழு நிகழ்ச்சி நிர­லுக்­குள் வைத்­தி­ருத்­தல் ஆகிய பரிந்­து­ரை­களை உள்­ள­டக்கி ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்லே பச்­செ­லெட் காட்­ட­மான அறிக்­கையை கடந்த வெள்­ளிக்­கி­ழமை விடுத்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ள­ரின் அறிக்­கையை நான் உன்­னிப்­பா­கப் பார்த்­தேன். அதில் எமது நாட்­டுக்கு சவால்­மிக்க பல விட­யங்­கள் உள்­ளன. இது தொடர்­பில் உடன் கருத்­துத் தெரி­விக்க முடி­யாது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் ஆணை­யா­ள­ரின் அறிக்கை தொடர்­பில் அரச உயர்­பீ­டம் ஒன்­று­கூடி விரி­வாக ஆரா­யும். அர­சின் நிலைப்­பாட்டை எமது உயர்­பீ­டம் விரை­வில் அறி­விக்­கும். எமது உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாட்டு ஜெனி­வா­வி­லும் வைத்து அறி­விக்­கப்­ப­டும்.

இ­லங்கை தொடர்­பில் கடந்த முறை ஜெனி­வா­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­னோம். நாட்­டின் நலன் கருதி இத­னைச் செய்­தோம். இம்­மு­றை­யும் ஐ.நாவில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­துக்கு நாம் இணை அனு­ச­ரணை வழங்க வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கின்­றோம்.ஐ.நாவைவோ அல்­லது சர்வதேச சமூ­கத்­தையோ பகைத்­துக்­கொண்டு எம்­மால் செயற்­பட முடி­யாது. அதற்­காக நாம் நாட்­டைக் காட்­டிக்­கொ­டுக்­கின்­றோம் என்று எவ­ரும் நினைக்­கக்­கூ­டாது என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!