மனைவி குறித்து பிரான்ஸ் அதிபர் சர்ச்சை கமெண்ட் – என்ன சொன்னார் ஆஸி. பிரதமர்?

தனது மனைவி குறித்து பிரான்ஸ் அதிபர் மாக்ரான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

பிரான்ஸ் அதிபர் மாக்ரான் ஆஸ்திரேலியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் மாக்ரான் மற்றும் அவரது மனைவிக்கு விருந்து அளித்தார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் சிட்னியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மாக்ரான், “இந்த சிறப்பான வரவேற்புக்கு உங்களுக்கு (ஆஸி. பிரதமர்) நன்றி கூறிக்கொள்கிறேன். உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி” என அவர் கூறினார். ருசியான மனைவி என்ற வார்த்தை பதம் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய மீடியாக்கள் இதனை மேலும் சூடாக்க இவ்விவகாரம் சர்ச்சையானது.

இந்நிலையில், மாக்ரான் கருத்துக்கு டர்ன்புல் விளக்கமளித்துள்ளார். “மாக்ரானின் கருத்தை மேற்புகழ்ச்சியாகவே எனது மனைவி எடுத்துக்கொண்டார்” என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!