என்னை தத்தெடுத்து கொள்ளுங்கள் – 85 வயதில் ஆதரவு தேடும் முதியவர்

சீனாவைச் சேர்ந்த 85 வயது முதியவர் மகன்கள் கைவிட்ட நிலையில் தன்னை தத்தெடுக்கும் குடும்பத்தை தேடி வருவதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெரும்பாலானோர் வயதான பின்னர் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களை கவனிக்க ஆள் இல்லாததால் இறந்த பின்னர் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு யாரும் இல்லை. சில இடங்களில் இறந்தவர்களின் உடலிருந்து துர்நாற்றம் வந்த பின்னரே அவர்கள் இறந்த சம்பவம் வெளியே தெரிய வருகிறது.

இந்நிலையில், சீனாவில் வசித்து வந்த கான் என்ற 82 வயது முதியவர் தனது மனைவி இறந்து பிறகு தனியாக வசித்து வந்தார். இறந்து பிறகு தன்னை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் தன்னை தத்தெடுக்க்கொள்ளுங்கள் என கூறினார். இது குறித்த செய்தியை பேருந்து மற்றும் பொது இடங்களில் ஒட்டினார். அதனை பார்த்த பலர் அவரை தொடர்பு கொண்டு பேசினர்.

அனாதையாக இறக்கக்கூடாது என்ற அவரின் கோரிக்கை அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன்களும் விட்டுச் சென்றதால் அவர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உலகில் பலர் தங்கள் இறுதி நாட்களில் யாரும் இல்லாமல் அனாதையாக இறப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!