சிரியா விமானத்தாக்குதலில் பொதுமக்கள் பலி

சிரியாவில் நேற்று நடைபெற்ற ரஷ்ய விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பிடியிலிருக்கும் கோட்டையான இட்லிப் மாகாணத்தின் வடமேற்கில் பல்வேறு இடங்களில் ரஷ்ய விமானம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 60 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை நுண்ணாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மனிதஉரிமை நுண்ணாய்வுக் குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் ஏ.எப்.பியிடம் தெரிவிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய போர் விமானம் ஒன்று பல்வேறு பிராந்தியங்களில் ஏராளமான தாக்குதல்களை நடத்தியது. இதில் இட்லிப் நகரமும் சாராகியூப் நகரும் அடக்கம்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரீசெப் தாயீப் எர்டோகன் ஆகியோரால் ஒரு சமாதான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இட்லிப் மாகாணத்தில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் அந்த உடன்படிக்கையை மீறியுள்ளது.

எட்டு ஆண்டுகள் தொடங்கி இன்று வரை மிகவும் மோசமான மனிதநேயமற்று திட்டமிட்டு ஆட்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கும் அதற்கு ரஷ்யா அளித்து வரும் ஆதரவையும் இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி சிரியாவின் மீது செலுத்தி வரும் தங்கள் ஆயுத மோதல் போக்கிலிருந்து துருக்கியும் ரஷ்யாவும் பின்வாங்கிக் கொண்டது. ஆனால் மீண்டும் சிரியா மீது கனரக ஆயுதத் தாக்குதலில் இந்நாடுகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வான்வழித் தாக்குதலில் 600க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 2011 ஆம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!