ஒக்­டோ­பர் 26 அர­சி­யல் சூழ்ச்­சியே ஐ.நாவின் இறுக்­க­மான பிடி இறுகக் காரணம்! – சந்திரிகா

‘இலங்கை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்லே பச்­செ­லெட் வெளி­யிட்­டுள்ள அறிக்கை மிக­வும் பார­தூ­ர­மான அறிக்கை. இதை இலங்­கை­யில் ஆட்­சி­யில் உள்ள எவ­ரும் உதா­சீ­னம் செய்­யக்­கூ­டாது. 2018 ஒக்­டோ­பர் 26 அர­சி­யல் சூழ்ச்­சியே இலங்கை மீதான ஐ.நாவின் இறுக்­க­மான பிடிக்­குக் கார­ண­ம் என்றும், முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­­துங்க தெரி­வித்­தார்.

‘மைத்­திரி – மகிந்த கூட்­ட­ணி­யின் அர­சி­யல் சூழ்ச்­சி­யால் இலங்கை பெரும் விளை­வு­களை எதிர்­கா­லத்­தில் சந்­திக்க வேண்­டி­வ­ரும் என நான் ஏற்­க­னவே எச்­ச­ரித்­தேன். அதன் ஒரு பிர­தி­ப­லிப்பே ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் காட்­ட­மான அறிக்­கை­யா­கும். இலங்­கை­யில் அர­சி­யல் சூழ்ச்­சியை முடி­வுக்­கொண்­டு­வர அய­ராது பாடு­பட்ட வெளி­நா­டு­கள் இன்று ஜெனி­வா­வில் இலங்­கையை தங்­கள் பிடிக்­குள் வைத்­துள்­ளன.

நாட்­டின் ஜனாதிபதியும் அர­சும் ஐ.நாவுக்­கும் சர்வதேச சமூ­கத்­துக்­கும் வழங்­கிய பல வாக்­கு­று­தி­கள் இன்­ன­மும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அந்த வாக்­கு­று­தி­கள் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன. அது­தான் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றத் தவ­றிய இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

ஐ.நா. தீர்­மா­னத்தை வெறும் போர்க்­குற்ற தீர்­மா­னம் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால நினைக்­கின்­றார் போல் இருக்­கின்­றது. முத­லில் அதில் உள்ள நாட்­டின் எதிர்­கா­லம் நலன் சார்ந்த பரிந்­து­ரை­களை அவர் பொறு­மை­யு­டன் இருந்து வாசிக்க வேண்­டும். அதனை உடன் செயற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.

அதே­வேளை, இலங்கை தொடர்­பில் ஐ.நாவில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள புதிய தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை உடன் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஆட்­சி­யி­லுள்ள அனை­வ­ரும் எடுக்­க­வேண்­டும் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!