மசூதியில் தாக்குதலை மேற்கொண்ட நபரை துணிச்சலுடன் எதிர்கொண்டது எப்படி – நான்கு பிள்ளைகளின் தந்தை கருத்து

நியுசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரின் கவனத்தை திசைதிருப்பி பலரின் உயிரை காப்பாற்றியது எவ்வாறு என நான்கு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவர் விபரித்துள்ளார்

அப்துல் அஸீஸ் வகாப்ஜடா என்பவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை துணிச்சலுடன் எதிர்கொண்டு பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்

வெள்ளிக்கிழமை துப்பாக்கி பிரயோக சத்தம் கேட்டதும் கையில் கிடைத்த கிரெடிட் கார்ட் ரீடரை எடுத்தபடி மசூதியை நோக்கி ஓடினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை இராணுவசீருடையுடனும் துப்பாக்கியுடனும் நபர் ஒருவரை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபரின் கவனத்தை திசைதிருப்புவதற்கா நான் எனது கையிலிருந்த கிரெடிட் கார்ட் ரீரை எறிந்தேன் என வகாப்ஜடா தெரிவித்துள்ளார்.

நான் அவரை மிரட்டவிரும்பினேன் அவர் உள்ளே வருவதை தடுக்க விரும்பினேன் ஆனால் அவர் உள்ளே நுழைந்தார் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

நான் எறிந்த கிரெடிட் கார்ட் ரீடர் அவரை தாக்கியது இதனால் துப்பாக்கிதாரி வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வந்து என்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள தொடங்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வீசிவிட்டு மற்றொரு துப்பாக்கியால் தாக்குதலை மேற்கொள்ள தொடங்கினார் எனினும் நான் வாகனங்களிற்குள் மறைந்து மறைந்து வெளியே வந்ததால் அவரால் என்னை இலக்கு வைக்க முடியவில்லை எனவும் வகாப்ஜடா தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபர் காரிற்குள் இருந்து மேலும் துப்பாக்கிகளை எடுக்கப்போகின்றார் என கருதிய நான் அவர் வீசி எறிந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றேன் ஆனால் அந்த துப்பாக்கியில் குண்டுகள் இருக்கவில்லை எனவும் வகாப்ஜடா குறிப்பிட்டுள்ளார்.

நான் துப்பாக்கியுடன் தன்னை துரத்தி வருவதை பார்த்ததும் அவர் தனது காரில் ஏறி அமர்ந்தார்,நான் என்னிடமிருந்த துப்பாக்கியை அம்பை போல பயன்படுத்தி அவரது கார் கண்ணாடியை சேதப்படுத்தினேன்,அவர் நான் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளேன் என்ற அச்சத்தில் அங்கிருந்து செல்ல முயன்றார் எனவும் வகாப்ஜடா குறிப்பிட்டுள்ளார்.

நான் அத்துடன் நிறுத்தவில்லை அவரை தொடர்ந்தும் துரத்தினனேன் அவர் வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார் அதன் பின்னரே நான் மசூதிக்கு சென்றேன் என வகாப்ஜடா குறிப்பிட்டுள்ளார்

நான் அன்று எதற்கும் அஞ்சவில்லை இது சத்தியம் நான் எனது உயிரை தியாகம் செய்ய தயாராகயிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!