மகிந்தவுக்கு மைத்திரி அனுப்பிய செய்தி!

மகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கென்யா பயணத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு மகிந்த தரப்பிற்கு தகவல்கள் அனுப்புள்ளார்.

மகிந்த தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டு அந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன், மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள தகவல்களுக்கு அமைய கூட்டணி அமைவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!