“வட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமிருக்காது”

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சர்வதேசத்திடம் நாம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியல் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இந்த நாட்டின் உத்பத்தியில் ஏற்பட்டுள்ள தடைகளே காரணம் எனவும் வடக்கு மக்களின் காணி விடுவிப்பு குறித்து தொடர்ச்சியாக அம்மக்களின் பிரச்சினைகளை அம் மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் ஒவ்வொருநாளும் முன்வைத்து வருகின்றனர். ஆகவே வடக்கில் பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!