அரசின் தோல்விக்கு மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்! – சரத் பொன்சேகா!!

கடந்த மூன்று வருட காலத்தில் அரசு என்ற வகையில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் பொறுப்பு கூறவேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

தேர்தலில் மக்களே அரசியல்வாதிகளை தெரரிவு செய்கின்றனர். அவர்கள் தவறானவர்களை தெரிவு செய்யும் போது தோல்விகள் ஏற்படலாம். இந்த அரசியல் கலாசாரம் மாற வேண்டும்.

தவறு செய்த அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்வோம் என்று வாக்குறுதி வழங்கி விட்டு ஆட்சிக்கு வந்து அதனை நிறைவேற்றாமையானது அரசு என்ற வகையில் ஒரு குறைப்பாடாகும்.

இவ்வாறான நிலைமையில் குற்றங்களை செய்து, மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தை கோரி நாடு முழுவதும் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். தற்போதைய அரசில் குறைப்பாடுகள் இருக்கலாம். இதற்காக கடந்த காலத்தில் மக்களின் பணத்தையும் நாட்டின் வளங்களையும் கொள்ளையிட்டவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது மாற்றமாக அமையது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.- என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!