நியூசிலாந்து தாக்குதல் வீடியோ நீக்கப்பட்ட பின் மீண்டும் பரவியது எப்படி? பேஸ்புக் விளக்கம்

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சில நிமிடங்களில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் அதனைப் பரப்பியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை பொலிசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன், தாக்குல் சம்பவத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தான். அதில்தான் அந்த பள்ளிவாசல்களிளுக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூடு வரை நேரலையாக ஒளிபரப்பு செய்தான்.

அவன் வெளியிட்ட பேஸ்புக் நேரலையை அந்த நேரத்தில் 200 பேர் மட்டுமே பார்த்தனர். மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4 ஆயிரம் முறை மட்டுமே பார்க்கப்பட்டிருந்தது. உடனடியாக பேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து ரிப்போர்ட் செய்தவுடன் வீடியோவை உடனடியாக நீக்கியதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஆனால், அதற்கு முன்பே அதனை பதிவிறக்கம் செய்த 8சன் ((8chan)) என்ற வலதுசாரி தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று பிராக்சி தளங்கள் (Proxy server) மூலமாக மீண்டும் பதிவேற்றி பரப்பியதாகக் கூறியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பேஸ்புக், வீடியோ வெளியாகி 29 நிமிடங்களுக்குப் பிறகே எங்களுக்கு ரிப்போர்ட் வந்தது. உடனடியாக நாங்கள் நீக்கினோம்.

தானியங்கி செயலிகள் மூலம் தடுத்து போது அதில் சிக்காமலிருக்க அந்த வீடியோவை எடிட் செய்து மீண்டும் பதிவேற்றி பரப்பியதாகவும், இதன் மூலம் எவ்வளவு தடுத்தும் 24 மணி நேரத்தில் 15 லட்சம் முறை வன்முறை வீடியோ பார்க்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!