பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்”.

“இது ஏழு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை என்கின்றனர். என் அறிவுக்கு எட்டிய வரையில் இந்த துயரமானது இரு நூறு ஆண்டுகளாக இந்த பகுதியில் நடக்கிறது” என்கிறார் தமிழர் அவையம் என்ற அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் செ. இளங்கோவன். பல நூற்றாண்டாக ஒரு சமூகத்திடம் நிலம் இருந்தது. அந்த நிலம் இவர்களை வளமாக்கியது. அந்த வளம் இவர்களிடம் அதிகாரத்தை கொண்டு வந்து சேர்த்தது. அந்த அதிகாரத்தை கொண்டு அனைத்தையும் ஒரு சாரார் சூறையாடினர்.

குறிப்பாக பெண்களை. அந்த நிலக்கிழார் மனோபாவத்தின் நீட்சிதான் இந்த சம்பவம் என்கிறார் இளங்கோவன். மேலும் அவர், பொள்ளாச்சி பகுதியை வெறும் கேளிக்கை நகரமாக மாற்றியதும் இவ்வாறான சம்பவத்திற்கு காரணம் என்கிறார். இதையே செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளருமான வழக்கறிஞர் இரா. முருகவேளும் சுட்டிக்காட்டுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!