சிறிலங்காவில் முதல் முறையாக செயற்கை மழை

சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முதல் முறையாக செயற்கை மழை பொழியச் செய்யப்பட்டது.

சிறிலங்கா விமானப்படையின் வை-12 விமானத்தின் மூலம், மவுசாகல நீர்த்தேக்கப் பகுதிக்கு மேலாக 8000 அடி உயரத்துக்கு மேல், நேற்றுக்காலை சுமார் 45 நிமிடங்கள் மழை மேகங்களின் மீது இரசாயனப் பொருட்கள் தூவப்பட்டன.

இதையடுத்து அந்தப் பகுதிகளில் சுமார் 24 நிமிடங்களுக்கு மழை பெய்தது.

இந்த செயற்கை மழை பெய்யும் திட்டத்துக்கு உதவ தாய்லாந்தின் பொறியாளர் குழுவொன்று வந்துள்ளது.

வரட்சியை சமாளிக்கும் வகையில் இந்த திட்டத்தை சிறிலங்கா மின்சார சபை, சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து தாய்லாந்து நிபுணர்களின் உதவியுடன் இந்த பரீட்சார்த்த செயற்கை மழைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!