கொண்டச்சியில் 25 ஏக்கரில் கைத்தொழில் வலயம்

மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மகிந்த அமரவீரவும், மகிந்தானந்த அளுத்கமகேயும், வில்பத்து அருகே 75 ஏக்கரில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படுவதாக நாளிதழ்களில் வெளியாகிய செய்தி உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் றிசாட் பதியுதீன், “இந்தத் திட்டத்துக்கு கொண்டச்சியில் 25 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. இதற்காக காடுகள் அழிக்கப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான நிலம் கோரப்பட்டுள்ளது.

காணிகள் வழங்கப்பட்டு, சுற்றாடல் பாதிப்பு இல்லை என்ற அறிக்கை அளிக்கப்பட்டால் மாத்திரம், இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!