ஊடகங்களுக்கு புலி முத்திரை குத்தும் அரசியல் கலாசாரம்- புத்திக்க பத்திரன

சிங்கள பௌத்தர் அல்லாத எவரும் ஊடகங்களை ஆரம்பித்தால் அவர்களுக்கு புலி முத்திரை குத்துவது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன ஊடகங்களும் மக்களை தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே தெரிவித்தார்.

இலங்கையில் ஊடகங்கள் வேறு கைகளுக்கு மாறும்போது அல்லது சிங்களவர் அல்லாத எவரும் ஊடகங்களை இயக்கம் போது அந்த ஊடகங்களுக்கு புலி முத்திரை குத்தும் அரசியல் கலாசாராம் ஒன்றே இங்கு உள்ளது. இலங்கையில் சிறிது காலமாக தனியார் நிறுவனம் சிலவற்றை அவ்வாறே புலி முத்திரை பொரித்து வருகின்றனர்.

ஏன் இலங்கையில் சிங்கள பௌத்தர் அல்லாத எவரும் ஊடகங்களை இயக்கக்கூடாது என்ற கட்டாயம் உள்ளதா. இன்று தமிழ் ஊடகங்களை புலிகள் என கூறுவதைப்போல நாளை முஸ்லிம் ஒருவர் ஊடகம் ஒன்றினை இயக்க ஆரம்பித்தால் அவர்கள் இஸ்லாமிய பயங்காரவாத அமைப்பு என கூறுவார்கள். இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!