இந்தியாவுடன் கூட்டு முயற்சியாக மத்தல விமான நிலையத்தை இயக்க முடிவு

மூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் சிறிலங்கா விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சீமெந்து தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.

”மத்தல விமான நிலையத்தை இந்திய விமான நிலைய அதிகார சபையும், சிறிலங்கா விமான நிலைய அதிகாரசபையும் இணைந்து, இலாபம் தரும் கூட்டு முயற்சியாக மூன்று மாதங்களுக்குள் செயற்படுத்தவுள்ளன.

இனிமேல் மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!