அரபு பெண் கவிஞர் மீது வன்­மு­றையை தூண்­டி­விட்­ட­தாக குற்­றச்­சாட்டு!!!

இஸ்­ரே­லிய– அரபு பெண் கவிஞர் ஒருவர் மீது வன்­மு­றையை தூண்டி விட்­டமை மற்றும் சமூக ஊட­கங்­களில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட விமர்­ச­னங்கள் மூலம் தீவி­ர­வாத அமைப்பு ஒன்­றுக்கு ஆத­ர­வ­ளித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­க்களை சுமத்தி இஸ்­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

தறீன் தாரூர் என்ற 36 வயதான மேற்­படி பெண் கவிஞர் சமூக ஊட­கங்­களில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட காணொளிக் காட்­சியில் தோன்றி வாசித்த கவி­தை­யொன்று உள்­ள­டங்­க­லாக 3 கவி­தைகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். பல மாதங்களை சிறையில் கழித்த அவர் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தறீன் கூறுகையில்,

“தனது கவிதைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவை வன்முறையைத் தூண்டும் வகையில் எழுதப்படவில்லை” எனவும் கூறினார்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பிற்கு எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கமான “பென் இன்டர்நஷனல்” கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தறீன் அமைதி வழியில் அவரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டுக்காக இலக்குவைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!