“ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது” – ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர்!

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார். அவர் ‘டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.

இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!