5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ரத்து!

5ஆம் ஆண்டு புல­மைப் பரி­சில் பரீட்­சையை இரத்­துச் செய்­வ­தற்­கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்­ளார். நேற்­றுப் பொல­ன­று­வை­யில் நடந்த “மைத்­திரி கைவினை கலா மண்­ட­பத்தை” மாண­வர்­க­ளி­டம் கைய­ளிக்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

புல­மைப் பரி­சில் பரீட்சை கார­ண­மாக மாண­வர்­கள் முகம் கொடுக்க நேரி­டும் அழுத்­தங்­க­ளைக் கவ­னத்­தில் கொண்டு இந்­தத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. புல­மைப் பரி­சில் பரீட்சை வறிய மாண­வர்­கள் வசதி படைத்த பாட­சா­லை­க­ளில் கல்வி கற்­கும் வாய்ப்­பைப் பெற்­றுக் கொடுக்­கும் நோக்­கில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆனால் அது தற்­போது பிர­சித்த பெற்ற பாட­சா­லை­க­ளில் இணை­வ­தற்­கான போட்­டி­யாக மாற்­றம் பெற்­றுள்­ளது.

பல்­க­லைக் கழ­கக் கல்­வி­யைக் கற்­ப­தற்­கான வாய்ப்­பைப் பெறும் பெரும்­பா­லான மாண­வர்­கள் புல­மைப் பரி­சில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்­த­வர்­கள் அல்­லர் என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. அத­னால் புல­மைப் பரி­சில் பரீட்சை இன்று கேள்­விக் குறி­யாக மாறி­யுள்­ளது என்றும் ஜனாதிபதி தெரி­வித்­துள்­ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!