“நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதைவிடுத்து புலமைப் பரிசில் பரீட்சையை நீக்கும் மைத்திரி”

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதை மறந்துவிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாரளுமன்றல் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,

பொது வேட்பாளரை ஏன் மக்கள் ஜனாதிபதியாக்கினர் என அவருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ நினைவு இருக்கின்றதா?.

தாம் ஏன் ஆட்சிக்கு வந்தோம் மக்கள் ஏன் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தனர், அவர்களுக்கு நீங்கள் எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் என்ற அனைத்தையும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல் மாகாணசபை தேர்தல் பிற்போகும் என தெரிந்தும் அன்று சபையில் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தவர்கள் அனைவரும் இன்று தேர்தல் இல்லையென முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!