ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவும் – பிரதி தூதுவர்

சிறிலங்காவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடந்த ஆட்கடத்தல் தொடர்பான தரவுகளைத் திரட்டுவது தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘சிறிலங்காவில் ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 3.5 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.

ஆட்கடத்தல் சம்பவங்களுக்கான தண்டனை பெற்றுக் கொடுப்பது, நீதி விசாரணையைப் பலப்படுத்துவது, ஆட்கடத்தல் பற்றிய தகவல்களைத் திரட்டுவது, ஆட்கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் செவையை பெற்றுக் கொடுப்பது ஆகிய நான்கு விடயங்களுக்கு இந்த நிதி செலவிடப்படுகிறது.

ஆட்கடத்தல்களைப் பற்றிய தரவுகளை அடையாளம் காணும் திட்டம் முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!