புலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு பல தடை : சி.வி.

புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலிவடக்கில் மீளக் குடியேறிய மக்களை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதல்வர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தமிழர்களின் நிதி எங்கள் பொருளாதாரத்திற்கும் வளமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது .

எனினும் இதனை எமது மக்கள் அனுபவிப்பதற்கு அரசாங்கம் தடையாக உள்ளது.

எமது மக்கள் இழந்த பொருளாதார பலத்தை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் நிதிஉதவி உதவக்கூடும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்த பலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன்.

இராணுவம் தொடர்ந்தும் நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது.

சிறிய பகுதியை விடுவித்து விட்டு வளமான பகுதியை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

வடக்கில் எஞ்சியுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!