முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடல்!!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப் பட்டு வருகிறது.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகலந்துரையாடலில் மாகாண அவைத் தலைவர் சிவஞானம், அமைச்சர்களான சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவனேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையே முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்து நடத்­தி­ வ­ரு­கி­றது. வழ­மை­போன்று இந்த முறை­யும் அது தொடர்­பில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள இந்­தக் கலந்­து­ரை­யா­டல் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை அனை­வ­ரும் ஒரு­மித்து ஒரே இடத்­தில் நினை­வு­கூர வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!