“கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா அவமானத்தால் தலைகுனியவில்லை” – பிரதமர் மோடி.

கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா அவமானத்தால் தலைகுனிய தாம் அனுமதித்ததில்லை என்றும், வலுவான அரசு இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவில் ((Amroha)), பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என அப்போது அவர் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த பிறகு பதிலடி கொடுக்க வேண்டுமா அல்லது அமைதி காக்க வேண்டுமா என கூட்டத்தினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய மோடி, தீவிரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆனால் பதிலடி கொடுத்தது இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என்பதோடு அவர்களுக்கு அழுகையை வரவைத்ததாகவும், உலக அரங்கில் பாகிஸ்தான் அம்பலப்படுத்தப்பட்டபோது அந்நாட்டிற்கு சாதகமாக சிலர் பேசத் தொடங்கியதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா அவமானத்தால் தலைகுனிய தாம் அனுமதித்ததில்லை என்றும், வலுவான அரசு இருக்க வேண்டியது நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். உலகமே இன்று இந்தியாவை மரியாதையுடன் பார்க்கிறது என்றால், அதற்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!