‘எம்பி’க் குதித்த எம்.பிக்கள் ‘பம்மி’க் கொண்டு கை தூக்கினர்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்­றுக் காலை இடம்­பெற்­ற போது, அர­சுக்கு எதி­ராக பல்­வேறு விமர்­ச­னங்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­வைத்­த னர். கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வைப் பெற்ற பின்­னர் அரசு கண்­டு­கொள்­வ­தில்லை. திட்­டங்­களை நிறை­வேற்­ற­வில்லை என்று கார­சா­ர­மாக கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாலை­யில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்­பில் அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

வரவு – செல­வுத் திட்ட இறுதி வாக்­கெ­டுப்­புக்கு முன்­ன­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் ரெலோ­வின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் பங்­கேற்­க­வில்லை.

‘தமிழ் மக்­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு அரசு செவி­சாய்க்­க­வில்லை. அவற்றை நிறை­வேற்­று­வோம் என்று கூடக் கூறு­வ­தற்கு அரசு தயா­ராக இல்லை. அர­சி­யல் தீர்வை எதிர்­பார்த்து நிற்­கை­யில், அற்ப அபி­வி­ருத்­திக்­காக அரசை ஆத­ரிப்­ப­தா­கவே மக்­கள் கரு­து­கி­றார்­கள். குழப்­பு­கின்­றோம் என்ற கருத்தோ, கட்சி முடிவை மீறிச் செயற்­பட்­டேன் என்ற பழிச்­சொல்லோ வேண்­டாம் என்­ப­தற்­காக மட்­டும் வாக்­க­ளிப்­பது மனதை உறுத்­து­கின்­றது’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் தெரி­வித்­தார்.

தொடர்ந்து கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், கூட்­ட­மைப்­புக்கு வாக்­கு­றுதி வழங்­கி­விட்டு, ஓர் அமைச்­ச­ரை­யும் கட்­சி­யை­யும் வளர்க்­கும் செயற்­பாடே வன்­னி­யில் தொடர்­கின்­றது. வாக்­கு­றுதி வழங்­கப்­ப­டு­கின்­றதே தவிர செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எம்மை நம்ப வைத்து ஏமாற்­று­கின்­ற­னர். இப்­ப­டியே தொடர்ந்­தால் வன்­னி­யில் அடுத்த தேர்­த­லில் கூட்­ட­மைப்பு இரண்டு ஆச­னத்­தைப் பெறும் நிலை­தான் ஏற்­ப­டும். கூட்­ட­மைப்பை மக்­க­ளி­ட­மி­ருந்து செல்­வாக்கை இழக்­கச் செய்­யும் நட­வ­டிக்­கையே தொடர்­கின்­றது என்­றார்.

‘வன­வ­ளத் திணைக்­க­ளம், வன­உ­யி­ரி­கள் திணைக்­க­ளம், மகா­வலி அதி­கார சபை, தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் ஆகி­ய­வற்­றின் நட­வ­டிக்­கை­க­ளால் வன்­னி­யில் நிலம் எஞ்­சுமா என்ற சந்­தே­கம்­தான் ஏற்­ப­டு­கின்­றது. அபி­வி­ருத்­தியை விட எமது மண்­ணையே பாது­காக்­க­வேண்­டும்’ என்று வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா தெரி­வித்­தார்.

கல்­முனை தொடர்­பில் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டா­லும் தீர்வு கிடைக்­க­வில்லை. தீர்வு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று கிழக்கு மாகாண நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

எமது எதிர்ப்பை வெளிக்­காட்­டும் வகை­யில், உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீட்டை எதிர்ப்­போம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் பதி­ல­ளித்­தார்.

எமது ஆத­ர­வைக் கோரும் தேசி­யக் கட்­சி­கள், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமது கட்­சி­களை வளர்க்க அனு­ம­திக்­கக் கூடாது என்று பல­முறை கூறி­யும், அந்­தச் செயற்­பாடு தொடர்­கின்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

‘இன்­றைய நிலை­யில் தீர்வு இல்லை. அபி­வி­ருத்தி இல்லை என்ற நிலமை ஏற்­பட்­டால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளால் அத­னைச் சகிக்க முடி­யாது. அபி­வி­ருத்­திக்­கா­க­வா­வது ஆத­ரிக்­க­வேண்­டிய நிலமை உள்­ளது’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.

இறு­தி­யில் நேற்று மாலை இடம்­பெற்ற வாக்­கெ­டுப்­பில் அரசை ஆத­ரித்து கூட்­ட­மைப்­பின் 13 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­த­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!