கொள்ளையடிக்கும் வழிகளை மூடி விட்டதால் காங்கிரஸ் கோபம்: – பிரதமர் மோடி கடும் தாக்கு

காங்கிரசாரின் கொள்ளை அடிக்கும் வழிகளை பாஜ மூடிவிட்டது. இதனால், ேகாபம் அடைந்துள்ள காங்கிரசார் தொடர்ந்து என்னை விமர்சனம் செய்கின்றனர்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். சித்ரதுர்காவில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: வீர மதுகிரி நாயகர், வீர பெண்மணி ஒபவ்வா, மாதார சென்னைய்யா ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்காக பெரிதும் உழைத்தனர்.

இவர்களை பற்றி பேச காங்கிரசாருக்கு நேரம் இல்லை. ஆனால், சுய விளம்பரத்திற்காக கோடி ேகாடியாக மக்களின் வரிப்பணத்தை செலவிடுகின்றனர். ஓட்டுக்காக மட்டுமே திப்பு சுல்தான் ஜெயந்தியை காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. கர்நாடக அரசு மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடுகள் செய்வதை தடுக்கவே, மத்திய அரசு ஜன்தன் மற்றும் ஆதார் இணைப்பு மூலம் 300க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு ேநரடியாக பணம் செலுத்தி வருகிறது. நேரடியாக மக்களுக்கு நிதி சென்றடைய நடவடிக்கை எடுத்ததால், ரூ. 80 ஆயிரம் கோடி கொள்ளை அடிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை கொள்ளை அடிக்கும் வழிகளை பாஜ தலைமையிலான மத்திய அரசு மூடி விட்டதால் பொறுத்துக்ெகாள்ள முடியாத காங்கிரசார், பாஜவையும், என்னையும் விமர்சனம் செய்கின்றனர். இவர்களின் விமர்சனத்திற்கு நான் அஞ்சமாட்டேன். பொய் மட்டுமே வாழ்க்கை என்றிருக்கும் காங்கிரசார், தேர்தல் வந்து விட்டால் போதும் அவர்களின் வாயில் பொய்யை தவிர வேறு எதுவும் வருவதில்லை. பொய் பிரசாரம், பொய்யான வாக்குறுதிகள் போன்றவற்றை கூறி மக்களை திசைத் திருப்புவதே அவர்களின் தொழிலாக உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து கொள்ளை அடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் காங்கிரசாருக்கு உள்ளது. நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு, பெண்களின் பாதுகாப்பு போன்றவைதான் பாஜ.வின் மந்திரமாக உள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஏற்றத்தாழ்வு இன்றி நிதி ஒதுக்கப்படுகின்றது.இவ்வாறு அவர் பேசினார்.

ஊழலை ஒழிப்பதுதான் பாஜ.வின் முக்கிய குறிக்கோள் கூட்டத்தில் மோடி மேலும் பேசுகையில், ‘‘ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையே காங்கிரஸ் வழக்கமாக கொண்டுள்ளது. கூட்டணி என்ற பெயரில் ெகாள்ளையர்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், நாட்டில் ஊழலை ஒழிப்பதுதான் பாஜ.வின் முக்கிய குறிக்கோள். இந்துக்கள், தலித்துக்களின் விரோதியாக காங்கிரஸ் செயல்படுகிறது. ஆனால், பாஜ தலித்துக்கள், பின்தங்கிய மக்கள், ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது’’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!