மின்­சா­ர­சபை பொறி­யி­ய­லா­ளர்­கள் – இன்று தொடக்­கம் சட்­டப்­படி வேலை!!

தேசிய பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­குழு அரச தலை­வ­ரின் உத்­த­ர­வினை மதிக்­கா­மல் தான் தோன்­றித்­த­ன­மா­கவே செயற்­ப­டு­கின்­றது. மின்­சார சபை பொறி­யி­ய­லா­ளர்­கள் சங்­கத்­தின் கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டா­மை ­யின் கார­ண­மாக இன்று முதல் சட்­டப்­ப­டி­யாக நிர்­ண­யிக்­கப்­பட்ட கட­மை­யில் ஈடு­ப­ட­வுள்­ளோம் என்று மின்­சார சபை பொறி­யி­ய­லா­ளர்­கள் சங்­கத்­தின் தலை­வர் சௌமிய குமா­ர­வடு தெரி­வித்­தார்.

மின்­சார சபை பொறி­யி­ய­லா­ளர்­கள் தயா­ரித்த 20 ஆண்டு கால மின் பாவனை தொடர்­பி­லான திட்­டத்­தினை பொதுப்­ப­யன்­பாடு ஆணைக்­குழு நிரா­க­ரித்து விட்­டது. இவ்­வி­ட­யம் தொடர்­பில் அரச தலை­வ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

மின்­சார சபை பொறி­யி­ய­லா­ளர்­கள் தயா­ரித்த 20 ஆண்டு காலத் திட்­டத்­தினை விரை­வில் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அரச தலை­வர் பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­கு­ழு­வுக்குக் கட்­டளை பிறப்­பித்­தார். ஆனால் இன்­று ­வரை அவ்­வி­ட­யம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!