பாகிஸ்தானில் இயற்கையின் சீற்றம் : 26 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட புழுதிப் புயல், இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பகதுங்கவா மாகாணங்களில் திங்கட்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் புயல் மற்றும் புழுதிப்புயலும் தாக்கியுள்ளது.

இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்சார்ந்த விபத்துகளில் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

10 மீனவர்களுடன் சென்ற படகு அரேபிய கடலில் கராச்சி கடற்கரையில் மாயமாகியுள்ளது. அதில் பயணித்த 6 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் மீட்டுள்ளனர். ஏனைய நான்கு பேரையும் தேடும் நடவடிக்கையில் கடற் படையினர் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!