கேரளாவில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். உறுப்பினர் ; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதையுடைய ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினாரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

அவரிடம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமுள்ளார்.

முன்னதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேதிக்கப்பட்ட 6 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களும் ஜஹ்ரான் ஹாஷிம் பேச்சுகளை விரும்பி கேட்டது தெரியவந்தது.

அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்து தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!